News May 16, 2024
திண்டுக்கல்: மழைநீரில் சிக்கிய கார்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று மேகமூட்டமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து அப்பகுதியில் சென்று கார் மழைநீரில் செல்லமுடியாமல் சிக்கியது. இதையடுத்து அந்த வழியாக சென்ற மற்றவர்கள் காரை தள்ளிவிட்டு வெளியேற்றினர்.
Similar News
News October 19, 2025
கொடைக்கானலில் நீரில் மூழ்கி வாலிபர் பலி!

பொள்ளாச்சியைச் சேர்ந்த 10 வாலிபர்கள் நண்பர்கள் குழுவாக நேற்று கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு அருவிப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, பொள்ளாச்சியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் நந்தகுமார் (வயது 21) என்பவர் எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் இளைஞரின் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
News October 19, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ரோந்து விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News October 18, 2025
திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் கடும் சோதனை

திண்டுக்கல் ரயில்வே நிலையம் நுழைவாயில் முன்பு இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாரேனும் தங்களது உடைமைகளில் மறைத்து வைத்து பட்டாசு மற்றும் வெடிக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்கிறார்களா? திண்டுக்கல் ரயில்வே காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான காவல்துறையினர் கடும் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.