News August 17, 2024
திண்டுக்கல் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொதுச் செயலர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் நாகராஜன், பொருளாளர் திருலோசந்திரன் முன்னிலை வகித்தனர்.
Similar News
News October 21, 2025
திண்டுக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 21, 2025
திண்டுக்கல்லில் தூக்கிட்டு தற்கொலை!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் சேவுகப்பெருமாள் (35). இவர் தனது மனைவி ராணி மற்றும் 2 குழந்தைகளுடன் ஒட்டன்சத்திரம் அருகே காந்திநகர் பகுதியில் குடியிருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே குடும்பத்தகராறு இருந்து வந்த நிலையில் சேவுகப்பெருமாள் இன்று(அக்.21) காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 21, 2025
திண்டுக்கல்: மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வேட்டி சேலை

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் இலவச சேலை வேட்டி அனுப்பப்பட்டு விட்டதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் உங்கள் இல்லங்களுக்கு அருகாமையில் உள்ள நியாய விலைக்கடைகளில் சென்று ஆண்களாக இருந்தால் வேட்டியும் பெண்களாக இருந்தால் சேலையும் இலவசமாக பெற்றுக்கொள்ளவும் என மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.