News August 17, 2024
திண்டுக்கல்: மரநாயை வேட்டையாடிய மறறொருவர் கைது

ஒட்டன்சத்திரம் வனச்சரகத்துக்குட்பட்ட பூதமலை பகுதியில் கடந்த 8ஆம் தேதி மரநாயை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வழக்கில் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த கண்ணப்பன், காளிமுத்து ஆகியோரை வனத்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் காளிமுத்துவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கண்ணப்பனை தேடி வருகின்றனர்.
Similar News
News December 18, 2025
திண்டுக்கல்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987-94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
News December 18, 2025
மின்கம்பியாள் தகுதி தேர்வு தேதி மாற்றம்!

திண்டுக்கல் கலெக்டர் சரவணன் செய்திக்குறிப்பில், மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண்தேர்வு டிச.13, 14 ல் நடைபெற இருந்த நிலையில் டிச.27, 28ல் கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், நடைபெறும். விண்ணப்ப தாரர்கள் அவரவர் விண்ணப்பித்திருந்த தொழிற் பயிற்சிநிலையங்கள் மூலம் நுழைவுச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
News December 18, 2025
திண்டுக்கல்: போலீஸ் அபராதம் விதிக்க முடியாது!

திண்டுக்கல் மக்களே போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, <


