News April 17, 2025

திண்டுக்கல் மக்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

image

▶️மாவட்ட ஆட்சித் தலைவர் 0451-2460084▶️காவல்துறை கண்காணிப்பாளர் 0451-2461500. ▶️திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் 9444113267▶️மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் 9444094266▶️மாவட்ட வருவாய் அலுவர்-0451-2460300 ▶️மாவட்ட மாசு கட்டுப்பாடு பொறியாளர் 0451-2461868 ▶️மாவட்ட தீயணைப்பு அலுவலர் 0451-2904081..மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

Similar News

News April 21, 2025

திண்டுக்கல்: பெண்ணை எரித்த காதலன் கைது 

image

தருமத்துப்பட்டி பன்றிமலை சாலையில் அமைதிசோலை பகுதியில் நீரோடையில் கடந்த 13-ம் தேதி இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக கன்னிவாடி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு சாணார்பட்டி, எமக்கல்லாபுரத்தை சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்ய வற்புறுத்தியதால் மாரியம்மாள் என்ற பெண்ணை எரித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

News April 21, 2025

திருமண தடை நீக்கும் அற்புத கோவில்

image

திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 21, 2025

திண்டுக்கல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 25-ந்தேதி காலை 10.30 மணிக்கு, விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறைகளின் தலைமை அலுவலர்கள் கலந்து கொண்டு மானிய திட்டங்கள், விவசாய கடன் தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். 

error: Content is protected !!