News January 24, 2025
திண்டுக்கல்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் மதுரை பேரையூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவர் நத்தம் அருகே உள்ள செந்துறை அரசு பள்ளியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக நத்தம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 22, 2025
திண்டுக்கல்: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

திண்டுக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <
News December 22, 2025
திண்டுக்கல் அருகே வசமாக சிக்கிய நபர்கள்!

வத்தலக்குண்டு, பிலீஸ்புரத்தை சேர்ந்தவர் குருநாதன் 23. பெரியகுளம் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே தனது ஐபோனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருவர் அவசரமாக பேச வேண்டுமென அவரது அலைபேசியை வாங்கினர். பேசுவது போல் நடித்து தப்பி ஓடினர். தொழில்நுட்ப உதவியுடன் வத்தலக்குண்டு போலீசார் காந்திநகரை சேர்ந்த ராஜேஷ் 39, விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் 38 ஆகியோரை கைது செய்தனர்.
News December 22, 2025
திண்டுக்கல் அருகே இருவர் தூக்கிட்டு தற்கொலை!

திண்டுக்கல், ம.மு.கோவிலூர் சக்கியம்பட்டியை சேர்ந்தவர் ஓட்டுநர் திருப்பதி. வயற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இவர், விரக்தியில் திண்டுக்கல் பஸ் ஸ்டேண்ட் எதிரே, எம்.ஜி,ஆர் சிலை பின்புறம் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனருடன் இணைக்கப்பட்டிருந்த கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதேபோல், பழனி காமராஜர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரங்கநாதன், குடும்ப பிரச்சனையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


