News March 27, 2024
திண்டுக்கல்: தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மலை கிராமமான 14வது வார்டு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தங்களுக்கு முறையான சாலை வசதி குடிநீர் வசதி இல்லாததால் நாங்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்தும் கருப்பு கொடி வைத்துள்ளனர். இதை பார்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் அப்பகுதி மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Similar News
News November 15, 2025
திண்டுக்கல்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <
News November 15, 2025
திண்டுக்கல்லில் மின்தடை அறிவிப்பு

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (நவ.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திண்டுக்கல் மாநகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை மற்றும் அதனை சுற்றுயுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதற்கு ஏற்றார்போல் வேலைகளை திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News November 15, 2025
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். கூலிவேலை பார்த்து வந்த இவர், சொந்தமாக ஆடுகள் வைத்து வளர்த்து வந்தார். தனது ஆட்டிற்கு தீவனத்தை பறிப்பதற்காக ஊரின் அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் செடிகளை அறுத்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


