News April 12, 2025

திண்டுக்கல்: திடீர் மின்தடையா ? உடனே இதுக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

Similar News

News November 14, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தில் , “அங்கீகரிக்கப்படாத வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். உங்கள் கைபேசிக்கு வரும் பகுதி நேர வேலைவாய்ப்பு அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.
மோசடி தொடர்பான புகார்களுக்கு உதவி எண்: 1930, வலைத்தளம்: www.cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம்.

News November 13, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (நவம்பர் 13) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல்துறைக்குரிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 13, 2025

திண்டுக்கல்லில் மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயார்

image

திண்டுக்கல்லில் கட்லா, ரோகு, மிர்கால் 16 லட்சம் வளர்த்தெடுக்கப்பட்டு விற்பனை
மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயாராக உள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும், தகவலுக்கு அணைப்பட்டி மீன்வள சார் ஆய்வாளர் பாப்பத்தியை கைபேசி 63748 26415 என்ற எண்ணிலும், பழநி மீன்வள ஆய்வாளர் சாந்தியை கைபேசி 75982 36815 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!