News March 26, 2025

திண்டுக்கல்; தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

Similar News

News November 15, 2025

திண்டுக்கல்லில் மின்தடை அறிவிப்பு

image

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (நவ.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திண்டுக்கல் மாநகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை மற்றும் அதனை சுற்றுயுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதற்கு ஏற்றார்போல் வேலைகளை திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News November 15, 2025

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

image

திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். கூலிவேலை பார்த்து வந்த இவர், சொந்தமாக ஆடுகள் வைத்து வளர்த்து வந்தார். தனது ஆட்டிற்கு தீவனத்தை பறிப்பதற்காக ஊரின் அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் செடிகளை அறுத்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 15, 2025

திண்டுக்கல் காவல்துறை சார்பில் அறிவுரை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை “சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டாம்” என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, சிறுவர்களிடம் வாகனங்களை கொடுக்க வேண்டாம் எனவும் விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளனர்.

error: Content is protected !!