News April 28, 2025

திண்டுக்கல்: சத்துணவு மையத்தில் வேலை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் உள்ள<> ஊராட்சி அலுவலகம், வட்டாரவளர்ச்சி <<>>அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு சம்பளம் ரூ.9,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளை கடைசி ஆகும். SHARE பண்ணுங்க.

Similar News

News October 28, 2025

திண்டுக்கல்லில் இளம்பெண் வெட்டி படுகொலை

image

திண்டுக்கல் அருகே சீலப்பாடியைச் சேர்ந்தவர் மீனாட்சி (25) என்பவர், செல்லமந்தாடி அருகே காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் தலையில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 28, 2025

திண்டுக்கல்: இரவு நேரம் ரோந்து காவலர்கள் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு 11 மணி முதல் செவ்வாய்க்கிழமை நாளை காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

திண்டுக்கல்: ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

image

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் பயிற்சி மையங்களான மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம், மாவட்ட மைய நூலகம், மக்களை நோக்கி பயிற்சி மையம், அறிவுசார் மையம் ஆகிய பயிற்சி மையங்களில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களில் 26 நபர்களுடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

error: Content is protected !!