News August 8, 2024

திண்டுக்கல் கைத்தறி நெசவாளருக்கு தேசிய விருது!

image

திண்டுக்கல் நெசவாளருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஸ்ரீ கற்பக விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ஜி.பாலகிருஷ்ணன் பருத்தி இரக சேலை உற்பத்தி செய்ததற்கான சிறந்த நெசவாளர்களுக்கு தேசிய கைத்தறி விருது வழங்க ஆணையிடப்பட்டது. அவர் புதுதில்லியில் நடைபெற்ற தேதிய கைத்தறி தின விழாவில் மத்திய அரசால் சிறந்த கைத்தறி நெசவாளர் “சாந்த் கபீர் தேசிய விருது 2023” தேசிய விருது வழங்கப்பட்டது.

Similar News

News October 31, 2025

பழனி: மாற்றுத்திறனாளிகளுக்கு கவனத்திற்கு!

image

பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் தாலுகாக்களில் இதுவரை அடையாள அட்டை, ரயில் & பஸ் பாஸ் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு முகாம் இன்று (31.10.2025) காலை 9 மணிக்கு பழனி அரசு மருத்துவமனையில் நடைபெறும். மாற்றுத்திறனாளிகள் நேரத்தில் வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைக்கு 5 புகைப்படம், ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை, பஸ்/ரயில் பாஸுக்கு 3 புகைப்படம், ஆதார், மாற்றுத்திறனாளர் அட்டை தேவையாகும்.

News October 31, 2025

திண்டுக்கல்: இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News October 31, 2025

திண்டுக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நவம்பர்-1ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும். வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் நில விவரங்கள் பதிவு செய்யாத விவசாயிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் எண் மற்றும் கைபேசி எண் போன்ற ஆவணங்களுடன் முகாம்களில் வந்து பதிவு செய்து திட்டத்தின் நன்மைகளைப் பெறலாம்.

error: Content is protected !!