News February 17, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (உங்களது மொபைல் போனுக்கு முன் பின் தெரியாத நபர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள் அல்லது லிங்கை கிளிக் செய்யவும் வேண்டாம்.. அதில் உங்களது விபரங்களை பதிவு செய்யும் வேண்டாம்…) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News December 19, 2025
திண்டுக்கல் காவல்துறையிடம் விழிப்புணர்வு பதிவு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சமூக வலைதளத்தில் இன்று (டிசம்பர் 19) முக்கிய விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டது. “சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்வோம்; விபத்துகளில் உயிரிழப்பைத் தவிர்ப்போம்” என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்புடன் செல்ல, கட்டாயமாக சீட் பெல்ட் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டது.
News December 19, 2025
BREAKING: திண்டுக்கல்லில் 3 லட்சம் பெயர்கள் நீக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில்,
▶️ திண்டுக்கல்- 60,493
▶️ பழனி- 52,174
▶️ ஒட்டன்சத்திரம்- 34,127
▶️ ஆத்தூர்-48,145
▶️ நிலக்கோட்டை-41,850
▶️ நத்தம்- 46,133
▶️ வேடசந்தூர்- 41,972
▶️ என மொத்தம் மாவட்டத்தில் 3,24,000 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
திண்டுக்கல்: உங்களிடம் ரேஷன் அட்டை இருக்கா?

திண்டுக்கல் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)


