News April 15, 2025
திண்டுக்கல்: கடன் தீர்க்கும் விநாயகர் கோயில்

திண்டுக்கல் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது 108 விநாயகர் கோயில். இந்தக் கோயிலில் 16 அடி உயர கஜமுக விநாயகரும் உள்ளார். இங்குள்ள 108 விநாயகர்களை தரிசித்தால் வாழ்வில் 108 நன்மைகள் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள். மேலும், இந்தக் கோயிலில் உள்ள ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News April 21, 2025
திருமண தடை நீக்கும் அற்புத கோவில்

திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 21, 2025
திண்டுக்கல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 25-ந்தேதி காலை 10.30 மணிக்கு, விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறைகளின் தலைமை அலுவலர்கள் கலந்து கொண்டு மானிய திட்டங்கள், விவசாய கடன் தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
News April 21, 2025
பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது!

பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவலர்கள் தீவிர ரோந்து & கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்ராஜா(25), சிவக்குமார்(23), மாரிசாமி(21), அருண்குமார்(37), ஜேம்ஸ்(27), நாகேந்திரன்(27) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் இடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.