News August 17, 2024

திண்டுக்கல்: எஸ்டிபிஐ கட்சியினர் மனு

image

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் சி.கைசர் அலி தலைமையில் அந்தக் கட்சியினர் மனு அளிக்க வந்தனர். இந்து முன்னணி அமைப்பின் மாநில முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் உண்மைக்கு மாறான தகவல், சமூக பதட்டத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Similar News

News October 15, 2025

திண்டுக்கல் காவல்துறையினர் வேலை வாய்ப்பு மோசடியில் 2- பேரை கைது செய்தனர்

image

திண்டுக்கல் கோபால்பட்டி சேர்ந்த மாமந்தி, புதுக்கோட்டையை சேர்ந்த கிருபாகரன் இருவரும் இணைந்து மதுரை,வாடிப்பட்டி, ஊத்துக்குளியை சேர்ந்த மக்கள் நல பணியாளர் கிருபாகரன் என்பவர் மகனுக்கு வேலை வாங்கி தருவதாக தவணை முறையில் ஏழு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு மோசடி செய்த வழக்கில் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அவர்களின் உத்தரவின் கீழ் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் மாமந்தி,கிருபாகரனை இன்று கைது செய்தனர்.

News October 15, 2025

திண்டுக்கல் வாலிபருக்கு கத்தி குத்து!

image

திண்டுக்கல்: சிறுமலை அடிவார ஒயின்ஷாப்பில் நேற்று(அக்.14) மது அருந்திக் கொண்டிருந்த ஆர்.எம்.டி.சி நகரைச் சேர்ந்த மணிகண்டன்(26) என்பவரை பொம்மாந்துரையைச் சேர்ந்த ஜான்பாண்டியன், விஜய பாண்டி, ராம்குமார், சிவபாண்டியன் ஆகியோர் கத்தியால் குத்தி காலால் உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

News October 15, 2025

திண்டுக்கல்: கனரா வங்கியில் வேலை வேண்டுமா..?

image

திண்டுக்கல் மக்களே.., கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!