News November 24, 2024
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை காவல் அதிகாரிகளின் இரவு நேர ரோந்து விவரம் வெளியிடப்பட்டுள்ளன. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, வேடசந்தூர், கொடைக்கானல் போன்ற திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு இரவு நேர ரோந்து பணிக்காவல் அதிகாரிகளின் பெயர் விவரம் மற்றும் செல்போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News November 8, 2025
திண்டுக்கல் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து இன்று முதல் 6 நாட்களுக்கு 1,000 கனஅடி விதம் தண்ணீர் திறக்கப்படும். வைகை அணையில் இருந்து 6 நாட்களுக்கு நீர் திறப்பதால் 35,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். வைகை அணையில் நீர் திறப்பால் திண்டுக்கல், மதுரை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
News November 8, 2025
திண்டுக்கல்லுக்கு 2 நாட்கள் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோரும், பள்ளி – கல்லூரி மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதகாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்களே வெளியில் செல்லும்போது குடையுடன் போங்க. இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 8, 2025
பழனியில் போலி நீட் சான்றுடன் மாணவி, பெற்றோர் கைது!

பழனி: சொக்கநாதன் – விஜய முருகேஸ்வரி (47) தம்பதியரின் மகள் காருண்யா ஸ்ரீவர்ஷினி (19), நீட் தேர்வில் 456 மதிப்பெண் பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான அனுமதி பெற்றார். இது போலியானது என கண்டறியப்பட்டு, குற்றப்பிரிவு போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் சான்றிதழ் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு கும்பலிடம் ரூ.25,000 கொடுத்து பெற்றது தெரியவந்தது.


