News November 23, 2024
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (22.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
திண்டுக்கல்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 6, 2025
திண்டுக்கல்லில் உடல் துண்டாகி இளைஞர் பலி!

திண்டுக்கல் எரியோடு மரவபட்டியை சேர்ந்த பரமேஸ்வரன் மகன் வினோத்(34) இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை, மனைவி 1 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வினோத் மன உளைச்சல் காரணமாக எரியோடு அருகே திண்டுக்கல் நோக்கி வந்த சரக்கு ரயில் முன்பு விழுந்து உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 6, 2025
திண்டுக்கல்: இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்


