News April 20, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று 20-04-2025 இரவு 11.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது…

Similar News

News November 20, 2025

திண்டுக்கல் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் நவம்பர் 22 மற்றும் 23 சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் SIR-2025-க்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் பதிவு பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நடைபெறும் இந்த முகாம்களில், அனைத்து வாக்காளர்களும் சென்று சரியான விவரங்களை புதுப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News November 20, 2025

திண்டுக்கல்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

திண்டுக்கல் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<> இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, சேலம் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE IT!

News November 20, 2025

திண்டுக்கல்: பல லட்சம் இழந்த இளம்பெண் விபரீத முடிவு!

image

திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி அருகே கோபாலபுரத்தில் வசித்து வந்த லாவண்யா (25) சமூக வலைதளங்களில் வந்த போலி வேலைவாய்ப்பு விளம்பரத்தை நம்பி மோசடி கும்பலுக்கு பல தவணைகளில் ரூ.5 லட்சம் ஆன்லைனில் செலுத்தியுள்ளார். இந்நிலையில், வேலை கிடைக்காததாலும் பணம் ஏமாற்றப்பட்டதாலும் மனமுடைந்து நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!