News January 24, 2025
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

திண்டுக்கல்லில் இன்று 24-01-2025 இரவு 11.00 மணி முதல் நாளை சனிக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது…
Similar News
News October 23, 2025
வேடசந்தூர் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு!

வேடசந்தூர் அய்யப்பா நகரை சேர்ந்தவர் ஜீவா.இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் தாடிக்கொம்புவை சேர்ந்த ஒருவருக்கும் மாரம்பாடியில் இறைச்சிக்கடை அமைப்பதில் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அந்த நபர் ஜீவாவை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.இதில் படுகாயம் அடைந்த ஜீவா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.வேடசந்தூர் போலீசார் விசாரணை
News October 22, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (23.10.2025) ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் மேட்டுப்பட்டி; உயிர்த்த ஆண்டவர் மக்கள் மன்றம், தொப்பம்பட்டி வட்டாரத்தில் தாளையூத்து; அரசு மேல்நிலைப்பள்ளி, வேடசந்தூர் வட்டாரத்தில் கூவக்காபட்டி; சமுதாய கூடம், வெள்ளைய கவுண்டனூர், வத்தலகுண்டு வட்டாரத்தில் விருவீடு எஸ்.எம்.மஹால், இடங்களில் முகாம்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
News October 22, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் இன்று அக்டோபர்-22 புதன்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.