News September 13, 2024
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித்துறை சார்ந்த பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் இன்று (13.09.24) நடைபெற்றது. அருகில் முதன்மை கல்வி அலுவலர் புண்ணிக்கொடி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
Similar News
News September 18, 2025
திண்டுக்கல்லில் நாளை விழிப்புணர்வு கண்காட்சி!

திண்டுக்கல்: மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச விழிப்புணர்வு நாணயக் கண்காட்சி ஆனது நாளை(செப்.19) முதல் செப்.21 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நந்தவனம் ரோட்டில் உள்ள தரகு மண்டி குமஸ்தா மண்டபத்தில் காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பங்கேற்க்கிறார்
News September 18, 2025
திண்டுக்கல்லில் மினி பஸ் இயக்க அழைப்பு!

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட ஏர்போர்ட் நகர் – விராலிப்பட்டி -ஆலம்பட்டி, அய்யலூர், வேடசந்தூர், வெல்லம்பட்டி சாலையூர், நால்ரோடு – சுள்ளறும்பு, பெருமாள்மலை – அடுக்கம், நிலக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன்- தாலுகா அலுவலகம், பெருமாள்மலை – கணேஷ்புரம் ஆகிய இடங்களில் மினி பேருந்துகளை இயக்க ஆர்வம் உள்ளவர்கள் நாளை(செப்.19) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
News September 18, 2025
திண்டுக்கல்லில் போதைக் காளான் விற்பனை!

திண்டுக்கல்: கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து போதை காளானை விற்பனை செய்வதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பெயரில் இன்று(செப்.18) போதை காளானை விற்பனை செய்த அப்சர்வேட்டரி, கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன்(38) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த போதை காளானை கொடைக்கானல் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.