News September 12, 2024

திண்டுக்கல் அருகே விபத்து

image

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திண்டுக்கல்- திருச்சி சாலையில் தங்கம்மாபட்டி அருகே அதிவேகமாக காரும், ஜீப்பும் வந்தது. இதில் முன் பின்னாக மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 3, 2025

திண்டுக்கல் மக்களே உஷார்: பல லட்சம் மோசடி!

image

வத்தலக்குண்டு வீருவீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 52. இவர் தன் மகன்கள் உட்பட 3 பேருக்கு அரசு வேலை வாங்கி தரும்படி ரூ.36.10 லட்சம் பணத்தை கரூர் குமார், நிலக்கோட்டை மாரிமுத்துவிடம் கொடுத்தார். பணத்தை பெற்ற அவர்கள் தலை மறைவாகினர். இதுகுறித்து மாரிமுத்து, குமார், உட்பட 4 பேர் மற்றும் இதில் தொடர்புடைய கரூரைச் சேர்ந்த கவுரிசங்கரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

News December 3, 2025

திண்டுக்கல்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த ஆலோசனை

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 பணிகள் வருகின்ற 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பில் இல்லாத, இறப்பு மற்றும் நிரந்தர குடிபெயர்ந்தோர் விவரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெரிவிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.

error: Content is protected !!