News April 23, 2025

திண்டுக்கல்: அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

image

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE!

Similar News

News November 15, 2025

திண்டுக்கல்: ஆதார் அட்டையில் திருத்தமா?

image

திண்டுக்கல் மக்களே, “ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)

News November 15, 2025

திண்டுக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

திண்டுக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>’Tamil Nilam’ <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News November 15, 2025

திண்டுக்கல்: ஆபாச புகைப்படம்.. அதிர்ச்சி சம்பவம்!

image

திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 35 வயது பெண்ணின் புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட சம்பவம் தொடர்பாக, அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடியை சேர்ந்த ஆனந்த் (40) என்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!