News April 22, 2025

திண்டுக்கல்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 235 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News April 25, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் மழை

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதனால், இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. மக்களே, உங்க ஏரியாவில் மழை பெய்து இருந்தால் கமெண்ட் பண்ணுங்க

News April 24, 2025

கொடைரோடு அருகே பெண் சிசுக்கொலை தாய் கைது

image

அம்மையநாயக்கனூர் சிசுக்கொயில் மருத்துவ குழுவினர் தலைமையில் இன்று குழந்தையின் உடல் தோண்டி எடுத்து சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
விசாரணையில் ஏற்கனவே பெண் குழந்தை இருக்கும் நிலையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் வளர்க்க முடியாது என்றும் கணவர் திட்டுவார் என மன உளைச்சலில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு செய்து சிவசக்தி தாயாரை கைது செய்தனர்.

News April 24, 2025

எஸ்.ஐ. ஆக ஆசையா? திண்டுக்கல்லில் இலவச பயிற்சி!

image

திண்டுக்கல் : காவல் சார்பு ஆய்வாளர்கள்(Police Sub-Inspectors) பதவிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன; கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம். இதை ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!