News August 7, 2024
திண்டுக்கல்லில் 66 மி.மீ மழை பதிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. கொடைக்கானல் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் கனமழை பெய்தது. மேலும், நேற்றும் பரவலாக மழை பெய்ததில் மாவட்டம் முழுவதும் 66.70 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கொடைக்கானல் ரோஸ் கார்டன் 31.1, பையன் பூங்கா 15, நிலக்கோட்டை 10.20, காமாட்சிபுரம் 1.50, நத்தம் 4.50, வேடசந்தூர் 1.80 மி.மீ மழை பதிவானது.
Similar News
News September 14, 2025
திண்டுக்கல்: வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். SHARE IT NOW
News September 14, 2025
திண்டுக்கல்: ரூ.10 லட்சம் சந்தனமரம் வெட்டி கடத்தல்!

திண்டுக்கல் அருகே பழநி அக்கமநாயக்கன்புதூரை சேர்ந்தவர் பிசியோதெரபிஸ்ட் குமரகுரு 40. இவரது தோட்டம் செங்குளம் அருகே உள்ளது. இவரது தோட்டத்தில் உள்ள சந்தன மரத்தை சிலர் வெட்டி கடத்தினர். இதன் மதிப்பு ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில் இருந்த சந்தன மரம் ஒன்றும் வெட்டப்பட்டது. பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 13, 2025
திண்டுக்கல்: இனி வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்!

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <