News August 10, 2024
திண்டுக்கல்லில் வெள்ளிதேரோட்டம் முன்பதிவு

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில், வெள்ளிதேரோட்டம் இனிமேல்
தினமும் நடைபெறும் என்று அறங்காவலர் குழுவினால் இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளித்தேர் இழுக்க விரும்பும் பக்தர்கள் தொலைபேசி எண்- 9943417289 அரவிந்தன் மற்றும் வாசுதேவன் 9362936203 திருக்கோயில் பணியாளர்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News September 17, 2025
திண்டுக்கல்: காவலர் தூக்கிட்டு தற்கொலை!

திண்டுக்கல்: பழனி அருகே குடும்பத் தகராறில் கீரனூரைச் சோ்ந்த முகமது காசிம் மகன் காவலர் அசன்முகமது (33) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரனூா் போலீஸாா் அசன்முகமது உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
News September 17, 2025
திண்டுக்கல்லில் மின் தடை அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை(செப்.18) செந்துறை, குரும்பபட்டி, பெரியூர்பட்டி, மல்லநாயக்கன்பட்டி, களத்துப்பட்டி, கோவில்பட்டி, மாமரத்துப்பட்டி, ஒத்தக்கடை, மேட்டுப்பட்டி, மணக்காட்டூர், சுக்காம்பட்டி, ரெட்டியாபட்டி, லிங்கவாடி, பிள்ளையார்நத்தம், கம்பிளியம்பட்டி, குடகிப்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே SHARE பண்ணுங்க!
News September 17, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல்,ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.