News March 4, 2025
திண்டுக்கல்லில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தமிழக அரசு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகின்றது. அந்த வகையில், வரும் சனிக்கிழமை 22.02.2025 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மூலம் சுமார் 10,000 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பணியாணை வழங்குகிறார்.
Similar News
News December 6, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு!

திண்டுக்கல்: இன்று (டிச.6) பாபர் மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு நேற்று திண்டுக்கல்லில் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் ரயில்வே போலீஸ், RPF, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மோப்ப நாய் பிரிவு இணைந்து ரயில் நிலையம் முழுவதும் சோதனை நடத்தினர்.பழனி ரயில் நிலையத்திலும் சார்பு ஆய்வாளர்கள் பாஸ்கரன், கணேசன் தலைமையில் பயணிகள் உடமைகள், நடைமேடை, வாகன நிறுத்துமிடங்கள் அனைத்திலும் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
News December 6, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடிகளில் அகப்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது. போலி வேலை வாய்ப்புகளை நம்பாதீர்கள் என்றும், சந்தேகத்துக்கிடமான தகவல்கள் ஏற்பட்டால் உடனடியாக சைபர்கிரைம் உதவி எண் 1930ஐ தொடர்புகொள்ளலாம். www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.