News August 26, 2024

திண்டுக்கல்லில் மர்மமான முறையில் இளைஞர் உயிரிழப்பு 

image

திண்டுக்கல், கொடைரோடு- அம்மையநாயக்கனூர் செல்லும் நெடுஞ்சாலையில் புற்கள் நிறைந்த பகுதியில் இரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இளைஞர் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற அம்மையநாயக்கனூர் போலீசார் உடலை கைப்பற்றினர். இறந்து கிடந்தவர் கொடைரோடு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த அருண்குமார்(24) என்பது தெரியவந்தது.
மேலும் இது கொலையா? விபத்தில் உயிரிழந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 16, 2025

திண்டுக்கல்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

திண்டுக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 16, 2025

திண்டுக்கல்: GPay / PhonePe / Paytm பயணிகள் கவனித்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News November 16, 2025

திண்டுக்கல்லில் சிறுவன் அதிரடி கைது!

image

திண்டுக்கல், சாணார்பட்டியை சேர்ந்தவர் கிஷோர் (24). இவர், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்தனர். அதில், வடமதுரையை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட சிலர் மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!