News August 18, 2024
திண்டுக்கல்லில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று வழிபாடுகள் நடந்தன. அபிராமி அம்மன், வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், சிறுமலை வெள்ளிமலை சிவன் கோயில், அகஸ்தியர்புரம் அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, நந்திக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News September 16, 2025
திண்டுக்கல்: UPSC நிறுவனத்தில் சூப்பர் வேலை!

திண்டுக்கல் மக்களே.., மத்திய அரசின் ‘UPSC’ நிறுவனத்தில் ‘Accounts Officer’ பணிக்கு 35 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.47,000 முதல் சம்பளம் வழங்கப்படும். வருகிற அக்.2ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க <
News September 16, 2025
திண்டுக்கல்: தலைமறைவான கொலையாளி கைது!

திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு நவேந்திரன் என்பவரை கத்யாதில் குத்தி கொலை செய்த வழக்கில் சேக்முகமது என்பவரை வத்தலகுண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேக்முகமது நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இந்நிலையில், திருப்பூரில் பதுங்கி இருந்த சேக்முகமதுவை போலீசார் கைது செய்தனர்.
News September 16, 2025
திண்டுக்கல்லில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திண்டுக்கல் மாநகராட்சி வார்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை(செப்.17) திண்டுக்கல்லில் உள்ள டி.இ.எல்.சி பள்ளி வளாகத்தில் காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் அரசின் 14 துறைகளுக்கான 43 அரசு சேவைகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.