News April 28, 2025

திண்டுக்கல்லில் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை!

image

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள தூங்கனம்பட்டி சேர்ந்தவர் பரமேஸ்வரன் (38). இவர் தனது மனைவி மணிமேகலை மற்றும் மகள் மகனுடன் சென்னையில் தங்கி நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான தூங்கனம்பட்டிக்கு வந்தவர், தனது தோட்டத்தின் மோட்டார் அறையில் சேலையால் தூக்கு மாட்டி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News December 6, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, போலியான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை வாங்கிக் தருவதாக கூறி பணம் பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதால், எந்த நபரின் போலியான வாக்குறுதியை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், உடனே 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

News December 6, 2025

நத்தத்தில் தட்டி தூக்கிய அமைச்சர்!

image

நத்தம் சட்டமன்றத் தொகுதி பகுதிகளில் பல்வேறு மாற்று கட்சியினர் தங்கள் கட்சிகளை விட்டு விலகி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் R.சக்கரபாணி தலைமையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், ஒன்றிய செயலாளர்கள் சேக்சிக்கந்தர் பாட்சா, பழனிச்சாமி, ரத்தினக்குமார், தொகுதி பார்வையாளர் ரஞ்சன்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News December 6, 2025

திண்டுக்கல்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!