News December 5, 2024

திண்டுக்கல்லில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் குள்ளனம்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 09.12.24 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது. 8,10,12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தார்.

Similar News

News December 18, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

இன்று டிசம்பர் 18 வியாழக்கிழமை, பொதுமக்களுக்கு WhatsApp எண்ணிற்கு SMS அனுப்பி, டெலிகிராம் குழுவில் இணையச் சொல்லி, அதில் கொடுக்கப்பட்ட பணிகளை செய்து சிறிய தொகை பெறுவதாக கூறி, பின்னர் அதிக தொகை கேட்டு ஏமாற்றும் மோசடி பரவி வருகிறது. இத்தகைய குறுஞ்செய்திகளை கண்டால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

News December 18, 2025

திண்டுக்கல்: வீடு கட்ட போறீங்களா? இத பண்ணுங்க!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இதனை வீடுகட்ட போகும் உங்கள் நண்பருக்கு SHARE பண்ணுங்க!

News December 18, 2025

திண்டுக்கலில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு – 5,168 பேர் பங்கேற்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்துத் தேர்வை 5,168 பேர் எழுதுகின்றனர். இதில் 4,011 ஆண்கள், 1,157 பெண்கள் உள்ளனர். GTN கலைக்கல்லூரியில் 1,800, SSM பொறியியல் கல்லூரியில் 2,000, PSNA பொறியியல் கல்லூரியில் 1,360 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு 2 தாள்களாக காலை 10 முதல் 12.30 மணி, பிற்பகல் 2.30 முதல் 5 மணி வரை நடக்கிறது.

error: Content is protected !!