News August 3, 2024

திண்டுக்கல்லில் திறனறிவு தேர்வு 2,266 பேர் விண்ணப்பம்

image

தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முதலமைச்சா் திறனறித் தோ்வு நாளை நடைபெற உள்ளது. எனவே வெற்றி பெறும் மாணவா்களுக்கு, 10 மாதங்களுக்கு தலா ரூ.1000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். திண்டுக்கலில் மட்டும் 2,266 போ் விண்ணப்பித்துள்ளனர். பழனி கல்வி மாவட்டத்தில் 5, திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 4 என 9 தோ்வு மையத்தில் தோ்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 1, 2025

அமைச்சர் சக்கரபாணி தலைமையில் கிராம சபை!

image

திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சியில் இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்க துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது உடன் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கலந்து கொண்டார். கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர்.

News November 1, 2025

பழனி அருகே லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் தாழையூத்து அருகில் சாமிநாதபுரத்தில் இன்று(நவம்பர்.1) முன்னால் சென்ற லாரி திடீரென பிரக் பிடித்ததால் பின்னால் வந்த கார் லாரியின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரை ஒட்டி வந்த கமுதியைச் சேர்ந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இது குறித்து சாமிநாத புரம் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 1, 2025

பழனி அருகே லாரி-கார் மோதல்: ஒருவர் பலி

image

பழனியை அடுத்த சாமிநாதபுரம் சோதனைச் சாவடி அருகே லாரி-கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். முன்பாக சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதாகப் கூறப்படுகிறது. பின்னால் வந்த கார் அதில் மோதியதில், கார் ஓட்டுநர் பசும்பொன்னையைச் சேர்ந்த கஜேந்திரமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்து பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!