News August 7, 2024

திண்டுக்கல்லில் திமுகவினர் புகழஞ்சலி

image

திண்டுக்கல் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று திண்டுக்கல் கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. இதில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருவருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பழனி எம்எல்ஏ செந்தில்குமார் வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 20, 2025

திண்டுக்கல் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கானு தெரியலையா? கவலை வேண்டாம். முதலில் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், தொகுதியை பதிவிட்டு, உங்கள் பெயர் உள்ளதா என பரிசோதியுங்கள். இதில் உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் www.voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாக, 2026 ஜன.18ம் தேதிக்குள் உங்கள் பெயரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க.

News December 20, 2025

JUSTIN: திண்டுக்கல்லில் தொடரும் போராட்டம்

image

திண்டுக்கல்லில் காலமுறை ஊதியத்துடன் கூடிய நிரந்தர பணியிடங்களை வழங்குமாறு செவிலியர்கள், 3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக அரசு நடவடிக்கை எடுக்காததால், செவிலியர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு போராட்டம் நடத்துகிறார்கள். சமூக ஆர்வலர்கள் அரசு அவர்களின் கோரிக்கையை உடனடியாக கவனிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 20, 2025

ஒட்டன்சத்திரம் அருகே சோகம்: காவலர் உயிரிழப்பு

image

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே நீலமலைக்கோட்டை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சரவணன். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி அலுவலகத்தில் தலைமை காவலராக பணி புரிந்து வருகிறார். நேற்று மதியம் பணியில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!