News August 14, 2024
திண்டுக்கல்லில் சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை

நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 9:05 மணிக்கு ஆட்சியர் பூங்கொடி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்கிறார். இந்நிலையில் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
Similar News
News November 17, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, ஒவ்வொரு நாளும் இணையப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு குறித்த புகைப்படங்களை வெளியிடுகிறது. இதன் தொடர்ச்சியாக, (நவம்பர் 16) இன்று “தேவையற்ற மின்னஞ்சல்கள் மற்றும் லிங்குகளை திறந்து உங்களது தகவல்களை இழக்க வேண்டாம்” என்ற குறிப்பு கொண்ட விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது.
News November 16, 2025
திண்டுக்கல்: ஆசிரியர் தகுதி தேர்வு 514 பேர் ஆப்சென்ட்

இடைநிலை மற்றும் பட்டதாரி பயிற்சி முடித்தவர்களுக்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 3,490 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். மாவட்டம் முழுவதும் 11 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் 2,976 பேர் தேர்வு எழுதியனர், 514 பேர் ஆப்சென்ட் இருந்தனர்.
News November 16, 2025
திண்டுக்கல்: இனி வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்!

திண்டுக்கல் மக்களே, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு:<
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க..(SHARE IT)


