News August 18, 2024

திண்டுக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 28, 2025

திண்டுக்கல் காவல்துறையின் எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படங்கள் சமூக வலைதள பக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் (நவ.28) இன்று” சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் நட்புக் கொள்வதை தவிர்ப்போம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

News November 28, 2025

திண்டுக்கல்: இனி அலைய தேவையில்லை!

image

திண்டுக்கல்லில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், www.tnpds.gov.in இணையதளம் மூலம் மின்னணு அட்டை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்தால், 30-40 நாட்களுக்குள் விண்ணப்ப நிலை குறித்து அரசு தகவல் வழங்கும். இதன் மூலம் நேரமும் பணமும் மிச்சப்படுத்த முடியும். இதை அனைவருக்கும் SHAER பண்ணுங்க!

News November 28, 2025

திண்டுக்கல்லில் சம்பவ இடத்திலேயே பலி!

image

திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த லட்சுமணன்பட்டி, பேட்டரி ஸ்கூல் அருகே திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!