News April 16, 2025
திண்டுக்கல்லில் ஆறு பவுன் செயின் பறிப்பு !

வேடசந்தூர் அருகே உள்ள ஜி.நடுப்பட்டி ஊராட்சி கேத்தம்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (55). இவர் நவாமரத்து பட்டியில் இருந்து கேத்தம்பட்டியை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆறு பவுன் நகையை அறுத்துக் கொண்டு பைக்கில் பறந்தனர். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 19, 2025
திண்டுக்கல்: ஆண்கள் தினத்தை கொண்டாடிய காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஆண்கள் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், ஆண் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஆண் காவலர்களுக்கு ஆண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஆண்கள் தினத்தை முன்னிட்டு ஆண் அமைச்சு பணியாளர்கள் மற்றும் ஆண் காவலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
News November 19, 2025
திண்டுக்கல் காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு

இன்று (நவம்பர் 19), திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்து கற்றுக் கொடுக்குமாறு அறிவுரை தரும் விழிப்புணர்வு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது. இது குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்திற்கு வழி வகுக்கும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
திண்டுக்கல்: இனி அலைய வேண்டாம்!

திண்டுக்கல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <


