News June 26, 2024
திண்டுக்கலில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திண்டுக்கல் உட்பட 8 மாவட்டங்களில் இன்று(ஜூன் 26) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.
Similar News
News December 10, 2025
திண்டுக்கல்: உங்கள் பகுதியில் ரோடு சரியில்லையா?

திண்டுக்கல் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<
News December 10, 2025
கொடைக்கானலில் அதிரடி கைது!

கொடைக்கானல் பாம்பார் புரம் பகுதியில் போதைக் காளான் விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மணி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சுற்றுலா பயணிகளுக்கு போதைக் காளான் வழங்கி வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 30 கிராம் போதைக் காளான் பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News December 10, 2025
திண்டுக்கல்லில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 13.12.2025 அன்று சனிக்கிழமை ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலைநாடுநர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். எனவே இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்.


