News June 26, 2024

திட்டமிட்ட அவதூறு பரப்புகின்றனர் – மாநகர் நல அலுவலர்

image

திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மாநகர் நல அலுவலர் பரிதாவாணி மீது மேயர் இளமதியிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து பரிதாவாணி கூறுகையில்;-புகாரில் உண்மை இல்லை. பொது மக்களுக்கான பணிகளை செய்து கொடுக்க சில அலுவலர்கள் பண வசூலில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து அலுவலர்களிடம் விசாரித்தேன். அதனால் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர் என்று தெரிவித்தார்.

Similar News

News October 31, 2025

திண்டுக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நவம்பர்-1ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும். வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் நில விவரங்கள் பதிவு செய்யாத விவசாயிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் எண் மற்றும் கைபேசி எண் போன்ற ஆவணங்களுடன் முகாம்களில் வந்து பதிவு செய்து திட்டத்தின் நன்மைகளைப் பெறலாம்.

News October 31, 2025

திண்டுக்கல்: உரங்களை அனுப்பினால் நடவடிக்கை!

image

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பினால், சம்பந்தப்பட்ட உர விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் தகவல். விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்கு உரங்களை விற்பனை செய்யவும், உரிமத்தில் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்வதையும் தவிா்க்க வேண்டும். இதை மீறும் உர விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார்.

News October 31, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு கவனத்திற்கு!

image

பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் தாலுகாக்களில் இதுவரை அடையாள அட்டை, ரயில் & பஸ் பாஸ் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (31.10.2025) காலை 9 மணிக்கு பழனி அரசு மருத்துவமனையில் நடைபெறும். மாற்றுத்திறனாளிகள் நேரத்தில் வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைக்கு 5 புகைப்படம், ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை; பஸ்/ரயில் பாஸுக்கு 3 புகைப்படம், ஆதார், மாற்றுத்திறனாளர் அட்டை தேவையாகும்.

error: Content is protected !!