News April 14, 2025

திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

Similar News

News November 3, 2025

திருப்பத்தூர்: மேம்பால சுவர் மீது மோதி விபத்து!

image

சென்னையை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஷாஹித் என்பவர் இன்று (02) காரில் குடும்பத்துடன் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றுகொண்டிருந்த நிலையில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை ரயில்வே மேம்பாலம் மீது சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த நால்வரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

News November 2, 2025

திருப்பத்தூர்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கு க்ளிக் <<>>செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 2, 2025

திருப்பத்தூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

திருப்பத்தூர் மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.

error: Content is protected !!