News April 20, 2025
திகிலூட்டும் தொடர் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தில், ஒரே நாளில் இரவு நேரத்தில் 8 வீடுகளின் பூட்டை உடைத்து ஐந்து சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தவாசி பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Similar News
News December 12, 2025
தி.மலை மாவட்டத்தில் இவிஎம் முதல் நிலை சோதனை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ, டிசம்பர் 12 அன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் அனைத்து இவிஎம் மற்றும் வி.வி.பாட் சாதனங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியை தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் நீக்கத்திற்கான ஆரம்ப பணிகள் முழு தீவிரத்துடன் நடைபெற்று வருகின்றன.
News December 12, 2025
தி.மலை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!