News April 2, 2024

தாழையூத்து: டிடிவி தினகரன் வேண்டுகோள்

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக இன்று (ஏப்ரல்1) இரவு தாழையூத்தில் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திறந்தவேனில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து பேசினர். அப்போது அவர், அ.ம.மு.க. தொண்டர்கள் நயினர் நரேந்திரன் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Similar News

News November 20, 2024

நெல்லையில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் விபரம்

image

இன்று காலை 10 மணிக்கு நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. காலை 9:15 மணிக்கு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு சிறப்பு ஆளுமை திறன் பயிற்சி கருத்தரங்கு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு சட்டமன்ற பேரவை பொதுப் கணக்கு குழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.

News November 20, 2024

நெல்லையில் மழை தொடரும்!

image

நெல்லை உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.

News November 20, 2024

நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

நெல்லை மாவட்டத்தில் விடிய, விடிய தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று(நவ.,20) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் சூழல் உள்ளதால் பாதுகாப்பாக இருக்கவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.