News May 15, 2024
தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியம், பில்ராம்பட்டு முதல் அருணாபுரம் வரை பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின்கீழ், தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட பலர் உள்ளனர்.
Similar News
News December 4, 2025
விழுப்புரம் மக்களே நீண்ட ஆயுள் பெற இந்த கோவிலுக்கு போங்க!

விக்கிரவாண்டி அகஸ்தீஸ்வரர் கோயில் தொன்மையான பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தத கோவில் ஆகும். இந்த கோவிலில் மூலவர் அகஸ்தீஸ்வரர், தாயார் தர்மசவர்த்தினி அருள்கின்றனர். இங்கு வந்து பிரதோஷ காலத்தில் சிவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அத்துடன், திருமணத் தடை நீங்கவும், கல்வியில் சிறக்கவும் பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள்.
News December 4, 2025
மாரத்தான்: பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினம் 2025 முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.
News December 4, 2025
விழுப்புரம் எய்ட்ஸ் விழிப்புணர்வில் கலந்து கொண்ட ஆட்சியர்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தினம் 2025 முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அதில் ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டார்.பின்னர், இன்று (டிச.04) எய்ட்ஸ் விழிப்புணர்வு போஸ்டர்களை ஆட்டோவில் ஒட்டினார்.


