News March 21, 2024
தாராபுரம், காங்கேயம் சட்டமன்றதொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

ஈரோடு தொகுதி கடந்த முறை மதிமுகவுக்கு அளிக்கப்பட்டிருந்தது.தற்போது மதிமுக-விற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், திமுக-வே இத்தொகுதியில் போட்டியிடுகிறது.இந்தத் தொகுதியில் திமுக-வின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.மாநில இளைஞரணியின் துணைச் செயலாளரார் ஆவார்.இந்தத் தேர்தலில் திமுக இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான். தாராபுரம், காங்கேயம் ஆகியவை இத்தொகுதியில் அடங்கும்.
Similar News
News November 14, 2025
வெள்ளகோவில் அருகே கார் கவிழ்ந்து விபத்து

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கரூர் சாலையில் இன்று அதிகாலை ஸ்ரீராம் நகர் அருகே நாய் குறுக்கே வந்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவர் காயம் அடைந்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .விபத்து குறித்து காவல் துறை விசாரித்து வருகின்றனர்.
News November 14, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய தம்பதி: அதிரடி கைது!

மூலனூர் பகுதியில் உள்ள கிராம கோவில்களில் உண்டியல் காணிக்கை, பூஜை பொருட்கள், பித்தளை தட்டுகள் திருட்டு போயின. இது தொடர்பாக கேமரா காட்சிகள் ஆய்வு செய்த போது திண்டுக்கல்லை சேர்ந்த பரமேஸ்வரன் (46), மனைவி விஜயலட்சுமி (35) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பூஜை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்.
News November 14, 2025
குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி: 17 ம் தேதி தொடங்குகிறது

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தில் குரூப் 2 மற்றும் குருப் 2 ஏ முதன்மை தோ்வுக்கான வகுப்புகள் வருகிற 17ம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக அறை எண் 439ல் தொடங்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள 0421 2999152 மற்றும் 9499055944 எண்ற எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் மனிஷ் கூறினார்.


