News April 26, 2025

தாய் மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு இரட்டை ஆயுள்

image

காரைக்கால்மேடை சேர்ந்த முத்து என்பவர் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் பரவை பகுதியில் இரவு நேரத்தில் வீடு புகுந்து தாய் மகள் இருவரை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி கார்த்திகா, முத்துவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.32,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Similar News

News October 19, 2025

நாகை: தீபாவளி வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

image

நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ கட்சியின் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், எங்கும் ஒளி பரவட்டும், இருள் ஒழியட்டும், இன்பம் நிலைக்கட்டும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

News October 19, 2025

நாகை: இனி அலைச்சல் வேண்டாம் மக்களே!

image

நாகை மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 19, 2025

நாகை: ரயில் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை

image

நாகை ரயில்நிலையத்தில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் பேசும்போது, ரயில்களில் பட்டாசு எடுத்து செல்ல தடைசெய்யப்பட்டு உள்ளது. எனவே பட்டாசு கொண்டு செல்வோர் முதல்முறையாக பிடிபட்டால் ரூ.1000 அபராதமும், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறினார்.

error: Content is protected !!