News April 7, 2025
தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை

நாட்டேரி கிராமத்தைச் சோர்ந்தவர் ஜெயலட்சுமி (35). இவரது மகன் நவீன்குமாா் (17). இவா் செய்யாற்றில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். நவீன்குமாா் சரிவர தொழிற்பயிற்சி நிலையத்துக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை இவர் தாய் கண்டித்ததால் மனமுடைந்த நவீன்குமாா், நேற்று (ஏப்ரல்.06) வீட்டு மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.
Similar News
News April 8, 2025
அட இவங்க எல்லாரும் திருவண்ணாமலை காரர்களா?

அந்தோணி அமல்ராஜ் – மேசைப் பந்தாட்ட வீரர். அருணகிரிநாதர் – முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்றவர். பதஞ்சலி சாஸ்திரி – இந்தியாவின் இரண்டாவது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. இராசாம்மள் தேவதாசு – இந்திய ஊட்டச்சத்து நிபுணர், கல்வியாளர். பவா செல்லதுரை – எழுத்தாளர், நடிகர். நித்தியானந்தம் – ஆன்மிகவாதி. கிருஷ்ணமூர்த்தி – நடிகர். உங்களுக்கு தெரிந்த தி.மலை பிரபலங்களை கமெண்ட் செய்யவும். ஷேர்
News April 8, 2025
சிறுமியிடம் பாலியல் சீண்டல்; குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

மூங்கில்துறைப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (25).கராத்தே மாஸ்டரான இவர் கடந்த 2023ஆம் ஆண்டு தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். இது குறித்த வழக்கிற்கான விசாரணை நேற்று தி.மலை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் பிரவீன் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News April 7, 2025
தி.மலையை 2ஆக பிரிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

தி.மலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கக் கோரி அண்ணா சிலை முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிலேயே நிலப்பரப்பில் 2-வது பெரிய மாவட்டமாக தி.மலை உள்ளது. இந்த மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் மக்கள் உள்ளனர். 8 சட்டபேரவை தொகுதிகள் உள்ள தி.மலையை 4 தொகுதிகள் வீதம், 2 மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று கூறினார். உங்கள் கருத்து என்ன?.