News August 25, 2024
தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம் 2/2

சென்னை கடற்கரையில் இன்றிரவு 10.40 மணிக்கு, நாளை அதிகாலை 3.55 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் மின்சார ரயில்கள், கடற்கரை – எழும்பூர் இடையே பகுதியளவில் ரத்து. சென்னை கடற்கரையிலிருந்து இன்றிரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு தாம்பரத்திற்கு புறப்படும் ரயில்கள், கடற்கரை – எழும்பூர் இடையே பகுதியளவில் ரத்து. இந்த ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 15, 2025
சென்னை: லாரி மோதியதில் இளைஞர் பரிதாபமாக பலி!

சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலையில் இன்று (நவ.15) சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த ஈச்சர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய மோகன் (27) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
News November 15, 2025
சென்னை: அரசு அலவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1)பான்கார்டு: NSDL 2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <
News November 15, 2025
சென்னை: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி!

பீகாரை சேர்ந்த மானவ்பஸ்வான் (48) எர்ணாகுளம் ராப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்து கொண்டிருந்தார். அப்போது, திருவொற்றியூர்-வ.உ.சி.நகர் அருகே வந்த போது, ரயிலில் படிக்கட்டுகளில் இருந்தவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிருந்தவர்கள் ரயில் செயினை நிறுத்தியவுடன், ரயில்வே போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


