News April 16, 2024
தாம்பரம் – மங்களூர் இடையே சிறப்பு ரயில்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து வரும் ஏப்.19 முதல் மே.31 வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரம் – மங்களூர் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, ஷோரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 19, 2025
ஸ்தம்பிக்கும் கோவை! இங்கு செல்ல தடை

கோவை ஒப்பணக்கார வீதி நகைக்கடை, ஜவுளிக்கடை, எலக்ட்ரானிக்ஸ் என வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஒப்பணக்கார வீதியில் கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
News December 19, 2025
கொடிசியா மைதானத்தில் கடற்கரை எக்ஸ்போ

கோவையில் கொடிசியா மைதானத்தில் குளிரூட்டப்பட்ட அற்புதப் பொழுதுபோக்கு நிகழ்வு (கடற்கரை எக்ஸ்போ) தொடங்குகிறது. இந்நிகழ்வை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று துவக்கி வைக்கவுள்ளார். குடும்பத்தோடு பொழுதைப் போக்க சிறந்த இடமாக அமைந்துள்ள இந்நிகழ்வில், 250 அடி நீளக் கடற்கரை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.