News April 22, 2025

தாம்பரம்: சீசிங் ராஜா கூட்டாளி கைது

image

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்ராஜ் (29). இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. சீசிங் ராஜாவின் கூட்டாளியான இவர் போலீசார் என்கவுன்ட்டர் செய்து விடுவார்களோ என பயந்து சில மாதங்களுக்கு முன் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்நிலையில் ஜாமினில் வந்த இவர் சேலையூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்டதால் நேற்று கைது செய்யப்பட்டார்.

Similar News

News April 22, 2025

ஹெராயின் வைத்திருந்த அஸ்ஸாம் வாலிபர்கள் 2 பேர் கைது

image

புனித தோமையர் மலை போலீசார் நேற்று மாலை, ஜிஎஸ்டி ரோட்டில் உள்ள தபால் அலுவலகம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி வந்த 2 பேரை சோதனை செய்தபோது, 25 கிராம் ஹெராயின் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்து மேற்கொண்ட விசாரித்ததில் அஸ்ஸாம்மை சேர்ந்த மன்சூல் இஸ்லாம் (28), முபாரக் அலி (27) ஆகிய இருவரை கைது செய்தனர்.

News April 22, 2025

மின்தடையா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க

image

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9444371912 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ X <>பக்கத்திலும் புகார்களை<<>> கொடுக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 22, 2025

இரவு நேர ரோந்து பணி அதிகாரிகளின் விபரம்

image

இன்று (ஏப்ரல்.21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.

error: Content is protected !!