News September 15, 2024
தாம்பரத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்

இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால்,தாம்பரத்திலிருந்து கூடுதலாக பேருந்து சேவைகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பயணிகள் நலம் கருதி இன்று கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
செங்கல்பட்டு: ஆயுத்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வில் பங்கேற்க, இலவச ஆயத்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். மீனவர் நலத்துறை மற்றும் அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து இந்த பயிற்சியை வழங்குகின்றன. இத்திட்டத்தில் பயிற்சிபெற www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து நவ-25 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
News November 17, 2025
செங்கல்பட்டு: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

செங்கல்பட்டு: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News November 17, 2025
செங்கல்பட்டு: 677 தேர்வாளர்கள் ஆப்சென்ட்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடைபெற்றது. செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட 18 மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது. தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 5,906 பேரில், 677 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால், 5,229 பேர் மட்டுமே இந்தத் தகுதித் தேர்வை எழுதினர்.


