News February 4, 2025
தாட்கோவில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ), நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், முதலமைச்சரின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவோர் திட்டம், பிரதான் மந்திரி அனுஷித் ஜாதி அபியுதாய் யோஜனா திட்டம், கல்விக்கடன் திட்டம் போன்றவற்றில் பயன் பெற மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 21, 2025
காசியை வழிபட்ட புண்ணியம் தரும் கடைமுடிநாதர்

நாகை மாவட்டம் கீழையூர் கடைமுடிநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். சிவனின் சாபம் பெற்ற பிரம்மா இங்குள்ள சிவபெருமானை வேண்டி மன்னிப்பு கேட்டதாக தல வரலாறு கூறுகின்றது. ஆகையால் இங்கு மனமுருகி மன்னிப்பு கோரினால் நாம் செய்த தவறுகளுக்கு சாபவிமோஷனம் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு வழிபட்டால் காசி சென்ற புண்ணியம் கிடைக்கும். ஷேர் செய்யுங்கள்
News April 21, 2025
நாகை: ரூ.25000 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th, 12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். Share It
News April 21, 2025
நாகை மாவட்ட காவல்நிலைய எண்கள்

▶புதுபட்டினம் – 04364-268452, ▶தலைஞாயிறு – 04369-270450, ▶மணல்மேடு – 04364-252426, ▶திட்டச்சேரி – 04366-234100, ▶வாய்மேடு – 04369-270450, ▶வலிவலம் – 04366-247229, ▶வெளிபாளையம் – 04365-242268, ▶செம்பானர்கோவில் – 4364-282427, ▶ வேதாரண்யம் – 4369-250450, ▶கீழையூர் – 4365-265475, ▶நாகப்பட்டினம் நகரம் – 4365-242450, ▶வேளாங்கண்ணி – 4365-263100 ஷேர் பண்ணுங்க.