News January 25, 2025
தவெக ராணிப்பேட்டை (கி) மாவட்ட செயலாளராக காந்திராஜ் நியமனம்

தமிழக வெற்றி கழகத்தின் சோளிங்கர், அரக்கோணம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கிய ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்ட கழகச் செயலாளராக வி.காந்திராஜ், இணைச் செயலாளராக முகம்மது ரஃபி, பொருளாளர் தனபதி, துணை செயலாளர் விகாஸ், துணைச் செயலாளர் தேவி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 10 பேரையும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நியமனம் செய்துள்ளார்.
Similar News
News November 26, 2025
ராணிப்பேட்டை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay<
News November 26, 2025
ராணிப்பேட்டைக்கு வந்த வெற்றிக் கோப்பை!

மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும் 34-வது ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 2025 போட்டிக்கான வெற்றிக் கோப்பை நேற்று ராணிப்பேட்டைக்கு வந்தது. முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் ஆட்சியர் சந்திரகலா தலைமையில், கலை நிகழ்ச்சிகளோடு கோப்பை உற்சாகமாக வரவேற்கப்பட்டது. இதில் ஆக்கி வீரர் வீராங்கனைகள், விளையாட்டு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News November 26, 2025
ராணிப்பேட்டை: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக சீர்திருத்தம் மற்றும் மகளிர் மேம்பாட்டில் குறைந்தது 5 ஆண்டுகள் சிறந்து விளங்கிய 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடம் இருந்து தமிழ்நாடு அரசின் ஒளவையார் விருது 2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பத்தினை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் வரும் ஜனவரி 6ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


