News April 14, 2025
தவறான சிசிச்சையால் ஒருவர் உயிரிழப்பு

நல்லம்பள்ளியில் தவறான சிகிச்சையால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோமியோபதி மருத்துவம் படித்த கிருஷ்ணசாமி காலில் காயத்துடன் வந்த கோவிந்தராஜிக்கு அலோபதி சிகிச்சை அளித்ததில் உயிரிழந்தார். விஷயம் வெளியே தெரியாமல் இருக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரின் குடும்பத்தினரிடம் ரூ. 10 லட்சம் பேரம் பேசியதாகக் கூறப்படும் நிலையில், அங்கு மாவட்ட சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
Similar News
News August 5, 2025
தருமபுரி: நாளை எங்கெல்லாம் மின் தடை?

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி மற்றும் அரூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பாரதிபுரம், உங்கரானஅள்ளி, நேருநகர், வெங்கட்டம்பட்டி, ஒட்டப்பட்டி, செந்தில்நகர், மாதேமங்கலம் தொழில்மையம், கலெக்டரேட், அரூர், பெத்தூர், அச்சல்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9- மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அரிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News August 5, 2025
தர்மபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தருமபுரி வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் ஆகஸ்ட் 8, 2025 அன்று காலை 11:00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் தலைமை தாங்கி, விவசாயிகளின் குறைகளைக் கேட்டுத் தீர்த்து வைப்பார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
News August 4, 2025
தருமபுரி மக்களுக்கு கொண்டாட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தருமபுரி செந்தில்நகர், இலக்கியம்பட்டி, நல்லம்பள்ளி, காலணி, நான்கு ரோடு, குமாரசாமிபேட்டை, காரிமங்கலம், சொன்னம்பட்டி, மாறண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, கொண்டம்பட்டி, பாலக்கோடு, பாளையம், சேசம்பட்டி, கெங்காலபுரம், பென்னாகரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சில நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உங்கள் பகுதியில் மழையா?