News April 25, 2025
தவறாக நடக்க முயன்றதால் ஆத்திரத்தில் கொலை

ராமேஸ்வரத்தை சேர்ந்த நம்புராஜன் என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பு மாயமான நிலையில் அவரது அக்காள் ராணி போலீசில் புகார் அளித்தார். இதில் போலீசார் நடத்திய விசாரணையில் 1 மாதத்திற்கு முன்பு நம்புராஜன் அவருடைய நண்பருடன் மது அருந்திய போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நம்புராஜன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர் நம்புராஜனை கொலை செய்து உடலை புதைத்தது தெரியவந்துள்ளது.
Similar News
News November 16, 2025
ராம்நாடு: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 16, 2025
ராமநாதபுரம்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

ராமநாதபுரம் மக்களே, எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 16, 2025
தொண்டியில் கடல் சீற்றம்; கரை தாண்டிய கடல்நீர்

தொண்டி, (நவ.15)ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பருவ நிலை மாற்றத்தால் கடல் கரை தாண்டி காணப்பட்டது. தொண்டி கடல் பகுதியானது எப்பொழுதும் அதிகமான அலைகள் இல்லாமல் அமைதியாக காணப்படும். ஆனால் கடந்த இரு தினங்களாக வாடை காற்று அதிகமாகி கடல் சீற்றத்துடன் கடலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வழக்கத்தை விட கரையைத்தாண்டி கடல் தண்ணீர் அலைகளுடன் காணப்பட்டது. நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.


